தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திருத்தங்கலில் செயல்படாத குடிநீர் நிலையம்

திருத்தங்கலில் செயல்படாத குடிநீர் நிலையம்

திருத்தங்கலில் செயல்படாத குடிநீர் நிலையம்


ADDED : ஜன 30, 2025 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பெரியகுளம் கண்மாயில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 20 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இது அனைவருக்கும் போதாத நிலையில் தண்ணீரை மக்கள் விலைக்கு வாங்கித் தான் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் திருத்தங்கல் பகுதி மக்களுக்காக பெரியகுளம் கண்மாயில் 30 க்கும் மேற்பட்ட போர்வெல் அமைக்கப்பட்டு புழக்கத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகின்றது.

இதன்படி ஒன்று முதல் 17 வார்டு பகுதி மக்களுக்கு புழக்கத்திற்கான தண்ணீருக்கு பற்றாக்குறை இல்லை. அதே சமயத்தில் 18 முதல் 22 வார்டு பகுதி மக்களுக்கு புழக்கத்திற்கு கூட தண்ணீர் இல்லை. இதற்காக 2019 ல் பெரியகுளம் கண்மாயில் ரூ. 20 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் இந்த சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வரவில்லை.

மேலும் தண்ணீர் வினியோகத்திற்காக அமைக்கப்பட்ட இரும்பு குழாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். தவிர சுத்திகரிப்பு நிலையம் முழுவதுமே சீமை கருவேல மரங்கள் சூழ்ந்து இருப்பதற்கு அடையாளமே தெரியவில்லை. இதனால் இன்று வரையிலும் 18 முதல் 22 வார்டு பகுதி மக்களுக்கு புழக்கத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது.

இதனால் இப்பகுதியினர் புழக்கத்திற்கு மட்டுமின்றி குளிக்க, துணி துவைக்க என தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே உடனடியாக பெரியகுளம் கண்மாயில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us