/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம் : விரக்தியில் மக்கள் விரக்தியில் மக்கள்

ADDED : ஜூன் 15, 2025 11:56 PM

விருதுநகர்:விருதுநகர் முத்துராமன்பட்டியில் செயல்படாத பாதுகாக்கப்பட்ட குடிநீர் பிளான்ட்டால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
விருதுநகரில் தாமிரபரணி குடிநீர் சரிவர வரததால் பல பகுதிகளில் குடிநீர் வினியோக இடைவெளி அதிகரித்துள்ளது. இதனால் ஆழ்துளை மூலம் வரும் உப்பு சுவை குடிநீரை பயன்படுத்துகின்றனர். இதனால் பலருக்கு கல்லடைப்பு, சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகிறது. ஒவ்வொரு நகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் புகார் அளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. புதிய தாமிரபரணி திட்டம் வந்தால் உப்பு சுவை இருக்காது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் விருதுநகர் நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் பெறப்பட்ட ரூ.25 லட்சத்தில் மினரல் சுத்திகரிப்பு பிளான்ட்கள், ஹைமாஸ் விளக்குகள் அமைப்பதாக தெரிவிக்கப்பட்டது. விருதுநகர் முத்துராமன்பட்டியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைக்கப்பட்டு செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இன்னும் அப்பகுதி மக்கள் குடம் ரூ.13க்கு விலைக்கு வாங்கி தான் நல்ல குடிநீரை அருந்தி வருகின்றனர்.
உப்பு குடிநீராலும், விலைக்கு வாங்குவதாலும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்து மினரல் குடிநீர் வினியோகிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.