/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'ஸ்டாப்பிங்' இல்லாத எர்ணாகுளம்--வேளாங்கண்ணி ரயில்; ஸ்ரீவில்லிபுத்துார் பயணிகள் ஏமாற்றம்
/
'ஸ்டாப்பிங்' இல்லாத எர்ணாகுளம்--வேளாங்கண்ணி ரயில்; ஸ்ரீவில்லிபுத்துார் பயணிகள் ஏமாற்றம்
'ஸ்டாப்பிங்' இல்லாத எர்ணாகுளம்--வேளாங்கண்ணி ரயில்; ஸ்ரீவில்லிபுத்துார் பயணிகள் ஏமாற்றம்
'ஸ்டாப்பிங்' இல்லாத எர்ணாகுளம்--வேளாங்கண்ணி ரயில்; ஸ்ரீவில்லிபுத்துார் பயணிகள் ஏமாற்றம்
ADDED : மே 11, 2025 11:29 PM

ஸ்ரீவில்லிபுத்தூர்; கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், செங்கோட்டை, விருதுநகர் வழியாக வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் ரயில் ஸ்ரீவில்லிபுத்துாரில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்காததால் ரயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தற்போது எர்ணாகுளத்தில் இருந்து சனி, திங்கள்கிழமைகளில் மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு கோட்டயம், கொல்லம், செங்கோட்டை, விருதுநகர், மானாமதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 5:20 மணிக்கு சென்றடையும் வகையிலும், மறுமார்க்கத்தில் ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் மாலை 6:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும் வகையிலும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது எர்ணாகுளத்தில் புதன்கிழமை தோறும் இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 3:15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும் வகையிலும் மறுமார்க்கத்தில் வியாழக்கிழமை மாலை 6:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:55 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும் வகையிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த இரு ரயில்களிலும் துவக்கம் முதல் ஸ்ரீவில்லிபுத்துார் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை. இதனால் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த ஏராளமான மக்கள் வேளாங்கண்ணி செல்லவோ, கேரளாவின் பல்வேறு நகரங்களுக்கு செல்லவோ ராஜபாளையம் சென்று தான் பயணிக்க வேண்டிய சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, இந்த ரயில்கள் ஸ்ரீவில்லிபுத்துாரில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.