/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இன்னொரு மசூதியை இழக்க தயாராக இல்லை தவ்ஹீத் ஜமா அத் மாநிலச்செயலாளர் பேட்டி

ADDED : பிப் 08, 2024 02:23 AM
விருதுநகர்:' பாபர் மசூதியை போல இன்னொரு மசூதியை இழக்க இஸ்லாமியர்கள் தயாராக இல்லை, என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநிலச்செயலாளர் பைசல் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
உத்தரபிரதேசத்தின் வாரணசியில் உள்ள கியான்வாபி மசூதியை ஆக்கிரமிக்கும் செயல்கள் நடந்து வருகிறது.
பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்படவேண்டும் என்பதற்காகவே ஏற்றுக்கொண்டோம்.
கோயில்கள், சர்ச்கள் கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் எதிரிகள் இல்லை. கியான்வாபி, மதுரா இடங்களில் மசூதிகளை இடித்து கோயில்களை கட்டுவோம் என கூறுவது தவறு.
மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் 150 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. வேலையின்மை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை சரிசெய்யாமல் மத பிரச்னையை துாண்டி விட்டு மத்திய அரசின் தவறுகளை மறைக்க பார்க்கின்றனர்.
இந்தியாவில் பாபர் மசூதியை போல இன்னொரு மசூதியை இழக்க நாங்கள் தயாராக இல்லை, என்றார்.