/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முயன்றால் முடியாதது இல்லை மரம் வளர்த்து வளம் சேர்க்கும் இளைஞர்கள்
/
முயன்றால் முடியாதது இல்லை மரம் வளர்த்து வளம் சேர்க்கும் இளைஞர்கள்
முயன்றால் முடியாதது இல்லை மரம் வளர்த்து வளம் சேர்க்கும் இளைஞர்கள்
முயன்றால் முடியாதது இல்லை மரம் வளர்த்து வளம் சேர்க்கும் இளைஞர்கள்
ADDED : ஜன 29, 2024 05:11 AM

சாத்துார் அண்ணாநகரில் முயன்றால் முடியாதது இல்லை என்ற உறுதியுடன் மரம் வளர்த்து இளைஞர்கள் வளம் சேர்த்து வருகின்றனர்.
சாத்துார் அண்ணா நகரில் ரோடு விரிவாக்க பணி, குடிநீர் திட்ட, பாதாள சாக்கடை விரிவாக்க பணிகளால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
அண்ணா நகர் பகுதி முழுவதும் மரங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன அப்போது இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று கூடி மரம் வளர்ப்பதில் ஈடுபட்டனர்.
இளைஞர்களின் முயற்சியால் அண்ணா நகரில் தற்போது வரிசையாக மரங்கள் வளர்ந்து வருகின்றன. கோடைகாலத்திலும் குளுகுளுவென இந்தப் பகுதி காணப்படுகிறது.
தற்போது இந்த பகுதியில் இளைஞர்கள் அழகுக்காக குறோட்டன்ஸ்அரளிச்செடிகளை நட்டி பராமரித்து வளர்த்து வருகின்றனர். மரக்கன்றுகளாக இருந்த போது காலை மற்றும் மாலை நேரங்களில் சைக்கிளில் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி பராமரித்து மரக்கன்றுகளை வளர்த்தனர். இதன் காரணமாக தற்போது மரங்கள் பசும் சோலையாக வளர்ந்துள்ளன.
மரம் வளர்ப்பதிற்கு அரசாங்கத்தை நம்பி இருக்காமல் இளைஞர்கள் தாங்களாக ஒன்று கூடி முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்றசங்கல் பத்தோடு மரக்கன்றுகளை விலைக்கு வாங்கியும் இலவசமாக பெற்றும் நட்டி பராமரித்து வளர்த்ததன் மூலம் தற்போது சுத்தமான காற்று வீசுகிறது.
ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள் இதுபோன்று மரம் வளர்ப்பதில் ஈடுபட்டால் ஒவ்வொரு ஊரும் மாசில்லா நகராக உருவாகும் என்பதில் ஐயமில்லை.