/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் மனைவிக்கு வீட்டில் வைத்தே 5வது பிரசவம் பார்த்த அசாம் தொழிலாளி கிராம சுகாதார செவிலியருக்கு நோட்டீஸ்
/
சிவகாசியில் மனைவிக்கு வீட்டில் வைத்தே 5வது பிரசவம் பார்த்த அசாம் தொழிலாளி கிராம சுகாதார செவிலியருக்கு நோட்டீஸ்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டில் வைத்தே 5வது பிரசவம் பார்த்த அசாம் தொழிலாளி கிராம சுகாதார செவிலியருக்கு நோட்டீஸ்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டில் வைத்தே 5வது பிரசவம் பார்த்த அசாம் தொழிலாளி கிராம சுகாதார செவிலியருக்கு நோட்டீஸ்
ADDED : நவ 05, 2025 03:20 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வீட்டிலேயே மனைவி அஷ்மா காத்துன்னுக்கு 30, அக்கம் பக்க பெண்கள் உதவியுடன் அசாம் தொழிலாளி அப்துல் ஜூலில் 37, பிரவசம் பார்த்ததில் பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து முறையாக தகவல் தெரிவிக்காதது குறித்து விளக்கம் கேட்டு கிராம சுகாதார செவிலியர் கிரேஷூக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே செங்கமலம்நாச்சியார்புரம் ஊராட்சி சாரதாநகரில் குடும்பத்தினருடன் வசிக்கும் அப்துல் ஜூலில், அவரது மனைவி அஷ்மா காத்துன் அருகிலுள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே 9, 7, 5, 3 வயதில் முறையே 4 குழந்தைகள் உள்ளனர். இக்குழந்தைகள் அசாம் மாநிலத்தில் பிறந்தன.
தற்போது 5 வது முறையாக அஷ்மா காத்துன் கர்ப்பமுற்றார். இவர் அப்பகுதியிலுள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் பதிவு செய்து முறையாக பரிசோதனைகளை செய்து வந்தார்.
இந்நிலையில் நிறைமாத கரிப்பிணியான அஷ்மா காத்துனுக்கு நேற்று முன் தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டது. கணவர் அப்துல் ஜூலில் அருகில் இருந்த பெண்கள் உதவியுடன் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்தார். இதில் 5 வதாக பெண் குழந்தை பிறந்தது.
இதை அறிந்த கங்காகுளம் பகுதி கிராம சுகாதார செவிலியர் கிரேஸ் வீட்டில் வைத்து பிரசவம் நடந்ததை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் தாய், குழந்தையை எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு பிரசவம் நடந்தது போல் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். எம்.புதுப்பட்டியில் தாய், குழந்தைகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்துல் ஜூலிலை விசாரித்தனர். அப்போது ஏற்கனவே பிறந்த நான்கு குழந்தைகளயும் அசாமில் இருந்தபோது வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்ததாகவும், அந்த போல் 5 வது குழந்தையையும் தானே பிரசவம் பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு அறிவுரை வழங்கி அதிகாரிகள் கண்டித்து அனுப்பினர்.
இதுகுறித்து முறையாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத கிராம சுகாதார செவிலியர் கிரேஸிடம் விளக்கம் கேட்டு மாவட்ட சுகாதார அலுவலர் ஜெகவீரபாண்டியன் குணசேகரன் நோட்டீஸ் அனுப்பினார்.
சுகாதார அலுவலர் கூறியதாவது:
அப்துல் ஜூலிலிடம் விசாரித்த போது அஷ்மா காத்துன் பனிக்குடம் உடைந்து பிரசவ வலியால் துடித்ததால் அருகில் இருந்த பெண்கள் உதவியுடன் பிரசவம் செய்ததாக தெரிவித்தார். இது யதார்த்தமாக நடந்த ஒன்று. இருப்பினும் வீட்டில் பிரசவம் பார்த்தது தவறு என அவருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்டித்து அனுப்பினோம். வீட்டில் பிரசவம் நடந்ததை முறையாக தெரிவிக்காததால் கிராம சுகாதார செவிலியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம் என்றார்.

