ADDED : பிப் 09, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் பி.ஏ.சி ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லுாரி என்.எஸ்.எஸ் முகாம் புது செந்நெல் குளம் கிராமத்தில் நடந்தது.
நாட்கள் நடந்த முகாமை முதல்வர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். ஓய்வு தலைமை ஆசிரியர் ராஜூ வாழ்த்தினார். முகாமில் பள்ளி மைதானம் சீரமைப்பு, உழவாரப்பணி, மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு ஊர்வலம், பேச்சுப் பயிற்சி, மருத்துவ முகாம் நிகழ்ச்சிகள் நடந்தன.
நிறைவு விழாவில் ஊராட்சி தலைவர் கௌமாரி வாழ்த்தினார். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர்கள் திருப்பதி வெங்கடேஸ்வரன், லோகன்யா செய்திருந்தனர்.

