/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை' செவிலியர்கள் சங்கம் கண்டனம்

ADDED : ஜன 19, 2025 02:20 AM
விருதுநகர்:அரசு மருத்துவமனையில் செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் தாக்கப்படுவது மருத்துவத் துறையில் உள்ள பாதுகாப்பின்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது என தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொதுச்செயலாளர் சுபின் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் ஜன. 16ல் பலியானார். இவரது உறவினர் மது போதையில் செவிலியரை தாக்கியுள்ளார். தமிழக அரசும், போலீசாரும் இணைந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து மருத்துவமனைகளிலும் போலீசாரை பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டும், என்றார்.