ADDED : நவ 05, 2024 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: திருச்சி மாவட்டம் ஒரத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீபாவளி அன்று பணிபுரிந்த செவிலியர் பணிமுடித்து மாலை வீடு திரும்பிய போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
பணியிடங்களில் செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாவட்டச் செயலாளர் சரோஜினி தேவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநில இணைச் செயலாளர் ஜெசுடெல்குயின், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கருப்பையா, சமூகநலத்துறை பணியாளர் சங்க மாநில பொருளாளர் முருகானந்தம் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.