/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து நர்சிங் கல்லுாரி மாணவி பலி
/
வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து நர்சிங் கல்லுாரி மாணவி பலி
வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து நர்சிங் கல்லுாரி மாணவி பலி
வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து நர்சிங் கல்லுாரி மாணவி பலி
ADDED : அக் 22, 2025 07:24 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் மழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் நர்சிங் கல்லுாரி மாணவி பலியானார்.
திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி மகள் பவானி 17. சிவகாசி தனியார் நர்சிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். திருத்தங்கல் பகுதியில் ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் வீரமணியின் வீடு வாறுகாலை ஒட்டி அமைந்துள்ள நிலையில் சுவர் பலவீனமடைந்துள்ளது. இருநாட்களுக்கு முன் காலை 10:00 மணிக்கு பவானி வீட்டில் படுத்திருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.