ADDED : பிப் 20, 2025 06:55 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே மதிய உணவு தரமற்றதாகவும், அறையின் உட்பகுதி சுகாதாரமற்றும் இருந்ததால் சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
விருதுநகர் அருகே ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் பி.டி.ஓ., ஆய்வு செய்தார். அப்போது பள்ளி சத்துணவு மையத்தில் பயனாளிகள் எண்ணிக்கை 293 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதிலும், தினமும் 60 பயனாளிகளுக்கு மட்டுமே மதிய உணவு தயார் செய்யப்பட்டு வழங்கி வந்தது கண்டறியப்பட்டது.
மேலும் கடந்த 2 மாதங்களாக உணவுப்பொருட்கள் சத்துணவு மைய இருப்பு பதிவேடு, ரொக்கப்பதிவேடு முறையாக பராமரிக்கப்படாமலும், மதிய உணவு தரமற்றதாகவும், காய்கறி சரியான விகிதத்தில் உணவில் சேர்த்துக்கொள்ளப்படாமலும், சத்துணவு அறையின் உட்பகுதி சுகாதாரமற்ற நிலையிலும் இருந்தது கண்டறியப்பட்டது. அப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் கவிதாவை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.

