தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ எச்.ஐ.வி., நோயாளிகளுக்கான சத்தான உணவு ஆதரவு திட்டம்

 எச்.ஐ.வி., நோயாளிகளுக்கான சத்தான உணவு ஆதரவு திட்டம்

 எச்.ஐ.வி., நோயாளிகளுக்கான சத்தான உணவு ஆதரவு திட்டம்


ADDED : ஜன 04, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 06:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் ஹிந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லுாரியில், வணிகவியல் துறை, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், ஏ.ஆர்.டி., எச்.ஐ.வி., உள்ளோர் நலச்சங்கம் இணைந்து எச்.ஐ.வி., நோயாளிகளுக்கான சத்தான உணவு ஆதரவு திட்டம் பேராசிரியர் செந்தில் தலைமையில் தொடங்கப்பட்டது.

ஏ.ஆர்.டி.,யின் மருத்துவ அதிகாரி செந்தில் செல்வி, அய்யனார், சுகாதார ஆலோசகர் பவானி ஆகியோர் மாணவர்களுக்கு எச்.ஐ.வி., ஸ்கிரீனிங், முன்கூட்டியே கண்டறிதல், தடுப்பது, ஆரோக்கியமான உணவுகள் குறித்து விளக்கினர்.

எம்.காம்.,துறை மாணவர்கள் சத்தான உணவுகளை எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகித்தனர். 40 எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டோர் பயனடைந்தனர். 37 மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர்கள் லாரன்ஸ், மஞ்சு ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us