ADDED : மே 02, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வழியாக மதுரை -- துாத்துக்குடி நான்கு வழி சாலை செல்கிறது. இதில், பாலையம்பட்டி அருகில் செல்லும் ரயில்வே மேம்பாலத்தின் சுற்று சுவரின் இரண்டு பக்கங்களிலும் சீமை கருவேலஞ் செடிகள் அடர்த்தியாக வளர்ந்து உள்ளது.
கீழ்பகுதியில் இருந்து பாலத்தின் மேல் பகுதி வரை வளர்ந்துள்ள இந்த செடிகள் சுற்றுச்சுவரை ஊடுருவி வேர் உள்ளே செல்வதால் பாலத்தின் உறுதித் தன்மை குலைய வாய்ப்புள்ளது. மேலும் பாலத்தின் மேல் பகுதியில் ஓரமாக செல்லும் பொழுது செடிகளின் முட்கள் வாகன ஓட்டி அவர்களின் கண்களை பதம் பார்க்கிறது நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தின் இருபுறமும் வளர்ந்துள்ள சீமை கருவேலம் செடிகளை அகற்றி பாலத்தை பராமரிக்க வேண்டும்.