தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அணையில் கருவேல மரங்கள்

அணையில் கருவேல மரங்கள்

அணையில் கருவேல மரங்கள்


ADDED : ஜூன் 02, 2025 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 12:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி: வெம்பக்கோட்டை அணையில் பெரும்பான்மையான பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து இருப்பதால் நீர் மட்டம் குறைந்து வருகிறது என விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே 1986ல் அணை கட்டப்பட்டது. 23 அடி உயரம் கொண்ட அணையில் 5 மதகுகள் உள்ளன. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து காயல்குடி, சீவலப்பேரி உள்ளிட்ட கிளை ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகிறது.

வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, கரிசல்குளம், சல்வார் பட்டி, ஏழாயிரம் பண்ணை, விஜய கரிசல்குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3300 எக்டேர் பாசன வசதி உடையது. மேலும் அணையில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

தவிர அணையை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அணையில் பெரும்பான்மையான பகுதியில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. தண்ணீர் விரைவிலேயே சீமைக் கருவேல மரங்களால் உறிஞ்சப்பட்டு தண்ணீர் மட்டம் குறைந்து வருகிறது.

இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் கிணற்று பாசனம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக அணையில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us