ADDED : ஏப் 14, 2026 10:06 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் அ.தி.மு.க., தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்து திறந்து வைத்தார். இதில் வேட்பாளர் கணேசன், அவைத்தலைவர் விஜயகுமரன், நகர செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் மச்சராஜா, கண்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: விருதுநகரில் 30 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். லோக்சபா தேர்தலில் கணேசனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தே.மு.தி.க., பொது செயலாளர் பிரேமலதா விருதுநகர் தொகுதியை பறித்து கொண்டார். தே.மு.தி.க.,வை தோளில் சுமந்தோம். இந்த தேர்தலில் சவுக்கடி கொடுக்க வேண்டும், என்றார்.
