/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணிகள் தரமற்று இருப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வது இல்லை
/
பணிகள் தரமற்று இருப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வது இல்லை
பணிகள் தரமற்று இருப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வது இல்லை
பணிகள் தரமற்று இருப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வது இல்லை
ADDED : மார் 18, 2025 06:34 AM
அருப்புக்கோட்டை: வார்டில் செய்யப்படும் பணிகள் தரமற்று இருப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வது இல்லை என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார் கூறினார்.
அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பழனிச்சாமி, கமிஷனர் ராஜமாணிக்கம், இன்ஜினியர் அபூபக்கர் சித்திக், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்
பாலசுப்பிரமணியன் (மார்க்சிஸ்ட்): 16வது வார்டில் தெருக்களில் வாறுகால்கள், ரோடு அமைக்கப்பட்டது. தரமில்லாத பணியால் மழைக்கு கரைந்து விட்டது. அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வதும் இல்லை. ஒப்பந்ததாரர்களை கண்டிப்பதும் இல்லை. வளர்ச்சிப் பணிகளை தரமாக செய்யுங்கள்.
பழனிச்சாமி, துணைத்தலைவர் : அதிகாரிகள் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்படும்.
முருகானந்தம், (பா.ஜ.,): திருச்சி ரோட்டில் லாட்ஜின் பின்புறம் டாஸ்மாக் கடை உள்ளது. அருகிலேயே நகர் புற ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. இங்கு வரும் நோயாளிகள் கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர். டாஸ்மாக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
ஜெயகவிதா, (தி.மு.க.,): தெற்கு தெரு புற நகர் பகுதிகளில் உள்ள தெருக்களில் வாறுகால் அமைக்க வேண்டும். மழை பெய்தால் தண்ணீர் தேங்கி விடுகிறது. மக்கள் சிரமப்படுகின்றனர்.
டுவிங்கிளின் ஞான பிரபா,(தி.மு.க.,) : பெர்கின்ஸ்புரம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். பிரச்சனைகள் குறித்து சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டால் எடுப்பது இல்லை.
மீனாட்சி (தி.மு.க.,) : நகரில் தெரு நாய்களை கட்டுப்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆண்டு 3 ஆகி விட்டது. காரணம் மட்டும் தான் சொல்லி கொண்டே இருக்கிறீர்கள். நாய்கள் பெருக்கத்தை குறைக்க உடனடியாக கருத்தடை யாவது செய்யுங்கள். இவ்வாறு விவாதங்கள் நடந்தது.