/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மந்தகதியில் புது பஸ்ஸ்டாண்ட் பணிகள் திறப்பது பற்றி அதிகாரிகளுக்கே தெரியாதாம்
/
மந்தகதியில் புது பஸ்ஸ்டாண்ட் பணிகள் திறப்பது பற்றி அதிகாரிகளுக்கே தெரியாதாம்
மந்தகதியில் புது பஸ்ஸ்டாண்ட் பணிகள் திறப்பது பற்றி அதிகாரிகளுக்கே தெரியாதாம்
மந்தகதியில் புது பஸ்ஸ்டாண்ட் பணிகள் திறப்பது பற்றி அதிகாரிகளுக்கே தெரியாதாம்
ADDED : டிச 15, 2025 05:15 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் துவங்கி 3 ஆண்டுகள் ஆன நிலையில் தொடர்ந்து மந்தகதியில் நடந்து கொண்டே இருப்பதால் அதிகாரிகளால் எப்போது திறக்கப்படும் என்பதை உறுதியாக கூற முடியவில்லை.
அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் இடித்துவிட்டு புதியதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. ரூ.8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், நன்றாக இருந்த பஸ்டாண்டை இடித்து விட்டு புதியதாக கட்ட 2023 மே மாதம் பணி துவங்கப்பட்டது. பணிகள் துவங்கி ஒரே ஆண்டில் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்து விடும் என தொகுதி அமைச்சரும், அதிகாரிகளும் கூறினர். 3 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடிவடையவில்லை. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 2 முறை பணிகளை ஆய்வு செய்தும், அதிகாரிகளால் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வரும் தேதியை சொல்ல முடியவில்லை.
ஓராண்டில் பஸ் ஸ்டாண்ட் செயல்படும் என்று இதில் கடை வைத்திருந்த வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் எதிர்பார்த்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் தொழில் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிகாரிகளும் முறையான ஆய்வு செய்வது இல்லை. பணி செய்ய ஒப்பந்ததாரரின் முடிவடையும் நாள் முடிந்தும் கூட ஒப்பந்தம் 2 முறை நீட்டிக்கப்பட்டு இன்னும் பணி தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதால் மக்கள் மழையிலும் வெயிலிலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தற்காலிக பஸ் ஸ்டாண்டும் மோசமான நிலையில் உள்ளது.
அமைச்சராலும் நகராட்சி அதிகாரிகளாலும் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் தேதியை உறுதியாக கூற முடியாத நிலையில் உள்ளனர். இந்த பிரச்சனையில் பலவித சிரமங்களை மேற்கொண்ட மக்கள் வருகிற தேர்தலில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

