/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொள்வது இல்லை
/
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொள்வது இல்லை
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொள்வது இல்லை
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொள்வது இல்லை
ADDED : மார் 19, 2025 06:27 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல துறை அதிகாரிகள் கலந்து கொள்வது இல்லை என விவசாயிகள் புகார் கூறினர்.
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ., (பொறுப்பு) கனகராஜ் தலைமையில் நடந்தது. இதில் தாசில்தார்கள், துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் :
ராம்பாண்டியன், காவரி, வைகை, குண்டாறு பாசன மாவட்ட தலைவர் : நடந்து கொண்டிருக்கும் சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்ட கால்வாய் பணிக்கு எந்த நிதியை ஒதுக்காதது அதிர்ச்சியாக உள்ளது. இந்த அரசு புதிய நீர்வழி பாதையை உருவாக்குவதில் தோல்வி அடைந்து விட்டதை இது காட்டுகிறது. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொள்வதே இல்லை.
அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் அரசு பண்ணையில் உள்ள இடத்தின் பெரும்பகுதியை அரசு தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்.
ஜனார்த்தனன், விவசாயி : விவசாய கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் வழங்குவதில் தனிநபர் ஜாமீன் கேட்கக் கூடாது. இதற்கான விதி கூட உள்ளது. ஆனால் கூட்டுறவு சங்கங்கள் இதன்படி செயல்படுவதில்லை.
மச்சேஸ்வரன், விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் : காட்டுப்பன்றிகளை ஒழிக்க அனைத்து கண்மாய்களிலும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபாலகிருஷ்ணன், நரிக்குடி : வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் கணக்கெடுப்பு முழுமையாக நடத்தப்பட வேண்டும் அத்துடன் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தது.
----