நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: டிச. 17-: அருப்புக்கோட்டை அருகே கமுதி விலக்கு -- செட்டிகுளம் விலக்கு வரை, 6 கி.மீ. ரோடு 36.40 கோடியில் அகலப்படுத்தி புதியதாக அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. ரோடு மேடும் பள்ளமுமாக இருப்பது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளிவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ரோட்டின் மீளும் தன்மை, ரோட்டின் மேற்பாதை மற்றும் தண்ணீர் வடியும் தன்மை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. இவை ஐ.ஆர்.சி., விதிகளின்படி இருப்பது உறுதி செய்யப்பட்டது என அதிகாரிகள் கூறினர்.

