/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலையில் நிறுத்தும் ஆம்னி பஸ்களால் விபத்து அபாயம் :அதிகாரிகள் நடவடிக்கை தேவை

ADDED : ஜூலை 13, 2025 12:16 AM

விருதுநகர்: விருதுநகர் நான்குவழிச்சாலையில் அனுமதியில்லாமல் ஆம்னி பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் வாய்ப்புள்ளது.
பெங்களூர், சென்னை, கோவை உள்பட வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து பயணிகளை ஏற்றி வரும் ஆம்னி பஸ்கள் எவ்வித அனுமதியும் இல்லாமல் விருதுநகர் பயணிகளை அரசு போக்குவரத்து கழகத்திற்கு அருகே விருதுநகரில் இருந்து சாத்துார் செல்லும் நான்குவழிச்சாலையில் இறக்கி விடுகின்றனர்.
இப்பகுதி போக்குவரத்து நிறைந்த பகுதியாகவும், விபத்து அபாயம் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. மேலும்ஆம்னி பஸ்கள் நின்று செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் பயணிகளை இறக்கி விடுவதற்காக காலை முதல் இரவு வரை பஸ்கள் ஒவ்வொன்றாக நின்று செல்வதால் பின்னால் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புள்ளது.
இதே போல எதிரே உள்ள நான்குவழிச்சாலை, சர்வீஸ் ரோட்டிலும் தனியார் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றுவதற்காக நின்று செல்வதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே விருதுநகர் நான்கு வழிச்சாலையில் அனுமதி இல்லாமல் பயணிகளை ஏற்றி, இறக்கும் ஆம்னி பஸ்கள் மீது வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விபத்து அபாயத்தை போக்க வேண்டும்.