/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டாஸ்மாக் கடையில் திருட முயற்சி ஒருவர் கைது: 4 பேர் தப்பி ஓட்டம்
/
டாஸ்மாக் கடையில் திருட முயற்சி ஒருவர் கைது: 4 பேர் தப்பி ஓட்டம்
டாஸ்மாக் கடையில் திருட முயற்சி ஒருவர் கைது: 4 பேர் தப்பி ஓட்டம்
டாஸ்மாக் கடையில் திருட முயற்சி ஒருவர் கைது: 4 பேர் தப்பி ஓட்டம்
ADDED : செப் 22, 2024 03:26 AM
காரியாபட்டி : காரியாபட்டி ஆவியூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக முத்துக்குமார பாண்டியன் 45, பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு நீண்ட நேரம் ஆனதால், டாஸ்மாக் கடை முன் இருந்த தகர செட்டில் மேற்பார்வையாளர், முத்துக்குமார பாண்டியன் தங்கினர்.
அதிகாலை டாஸ்மாக் கடை முன் பேச்சு சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது, 5 பேர் கொண்ட கும்பல் டாஸ்மாக் கடை கிரில் கேட்டில் போட்டிருந்த பூட்டை உடைத்து கொண்டிருந்தனர். இருவரும் சத்தம் போடவே அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
அதில் அவனியாபுரம் சின்ன பச்சேரியை சேர்ந்த பிரவீன்ராஜை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த சிவாகுமார், சதீஷ்குமார், விஜய், மாதேஷ் ஈடுபட்டது தெரிந்தது. ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.