/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
த.வெ.க., நிர்வாகிக்கு பாட்டில் குத்து: ஒருவர் கைது
/
த.வெ.க., நிர்வாகிக்கு பாட்டில் குத்து: ஒருவர் கைது
த.வெ.க., நிர்வாகிக்கு பாட்டில் குத்து: ஒருவர் கைது
த.வெ.க., நிர்வாகிக்கு பாட்டில் குத்து: ஒருவர் கைது
ADDED : ஜன 27, 2026 05:40 AM
அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே காத்தான்பட்டியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி 41. த.வெ.க., மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் பெயரிட்ட செக் ஒன்று சில நாட்களுக்கு முன்பு தொலைந்து விட்டது.
கமுதி அருகே இடையன்குளத்தை சேர்ந்த முனிசக்தி, 36, தொலைந்த செக் எனக்குத் தெரிந்த நபரிடம் உள்ளதாக கூறியுள்ளதால் அதை பெறுவதற்கு காந்தி நகரில் உள்ள டாஸ்மாக் பாருக்கு வருமாறு அழைத்துள்ளார். கணேசமூர்த்தி அங்கு சென்றுள்ளார். அங்கு முனிசக்தி, அவரது நண்பர் வீரப்பன், கணேசமூர்த்தி மது அருந்தினர்.
பின்னர் முனிசக்தியிடம் செக்கை தருமாறு கணேசமூர்த்தி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் முனிசக்தி அங்கிருந்த பீர்பாட்டிலை உடைத்து கணேசமூர்த்தியை குத்தியுள்ளார்.
படுகாயம் அடைந்த அவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முனிசக்தியை போலீசார் கைது செய்தனர்.

