/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதயாத்திரை பக்தர்கள் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி
/
பாதயாத்திரை பக்தர்கள் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி
பாதயாத்திரை பக்தர்கள் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி
பாதயாத்திரை பக்தர்கள் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி
ADDED : ஜன 05, 2024 05:33 AM
சாத்துார் : சாத்துார்- - கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் திருச்செந்துார் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத லாரி மோதியதில் ஒருவர் பலியானார் ,இருவர் படுகாயம் அடைந்தனர்.
சிவகாசி வடக்கு ஆணைக்குட்டத்தைச் சேர்ந்தவர்கள் பூப்பாண்டி, 40. ரமணா, 22. கருப்பசாமி, 23. நேற்று முன்தினம் திருச்செந்துாருக்கு பாதயாத்திரையாக கிளம்பி வந்தனர்.
சாத்துார் - கோவில்பட்டி 4 வழிச்சாலையில் தனியார் மில் அருகில் அதிகாலை 3:00 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி மோதியது. சம்பவ இடத்தில் பூப்பாண்டி பலியானார். ரமணா, கருப்பசாமி படுகாயம் அடைந்தனர்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரியை போலீசார் தேடிவருகின்றனர். சாத்துார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.