ADDED : செப் 07, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் முத்தாண்டியாபுரத்தை சேர்ந்தவர்கள் மாரிக் கண்ணு, 45. அய்யலுச்சாமி, 43. மகாலிங்கம், 50. மூவரும் நேற்று முன் தினம் மதியம் 1:00 மணிக்கு ஏழாயிரம் பண்ணையில் மது அருந்தி உள்ளனர்.
மாரிக்கண்ணு டூ வீலர் ஓட்ட மற்ற இருவரும் பின்னால் அமர்ந்து வந்துள்ளனர்.(ஹெல்மெட் அணியவில்லை) முத்தாண்டியாபுரம் அருகில் வந்த போது டூ வீலர் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
மகாலிங்கம் சம்பவ இடத்தில் பலியானார். மற்ற இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏழாயிரம் பண்ணைபோலீசார் விசாரிக்கின்றனர்.