/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் 54 ஓட்டுக்காக ஒரு ஓட்டு சாவடி
/
ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் 54 ஓட்டுக்காக ஒரு ஓட்டு சாவடி
ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் 54 ஓட்டுக்காக ஒரு ஓட்டு சாவடி
ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் 54 ஓட்டுக்காக ஒரு ஓட்டு சாவடி
ADDED : பிப் 24, 2026 05:39 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதியில் செண்பகத் தோப்பில் மலைவாழ் பழங்குடியினர் 54 பேர் ஓட்டளிப்பதற்காக தனியாக ஒரு ஓட்டு சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதியில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து109 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 18 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தார் 40 பேர் உட்பட மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 367 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் எளிதில் ஓட்டு போட வசதியாக 308 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் செண்பகத் தோப்பில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியினர் 54 பேர், வத்திராயிருப்பு தாலுகாவில் தானிப்பாறை ராம் நகரில் 144 பேர் ஓட்டு போட வசதியாக ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வத்திராயிருப்பு தாலுகா கீழக்கோபாலபுரம் ஆர்.சி. துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில் ஆயிரத்து 113 பேர் ஓட்டு போட உள்ளனர்.