/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்கம்பங்களில் கட்டிய கேபிள் வயர் பலகைகளை அகற்ற ஒரு வாரம் கெடு
/
மின்கம்பங்களில் கட்டிய கேபிள் வயர் பலகைகளை அகற்ற ஒரு வாரம் கெடு
மின்கம்பங்களில் கட்டிய கேபிள் வயர் பலகைகளை அகற்ற ஒரு வாரம் கெடு
மின்கம்பங்களில் கட்டிய கேபிள் வயர் பலகைகளை அகற்ற ஒரு வாரம் கெடு
ADDED : அக் 11, 2025 03:42 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மின்கம்பங்களில் கட்டிய கேபிள் வயர், பலகைகளை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என மின்வாரியம் கெடு விதித்துள்ளது.
மாவட்டத்தில் மின்கம்பங்களில் கேபிள் வயர், பலகைகள் கட்டுவது வாடிக்கையாக உள்ளது. தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் இந்த கேபிள் வயர்கள், விளம்பர தட்டிகள் காற்றில் ஆடி பாதிப்பு ஏற்படுத்தும் சூழல் உள்ளது. இது குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியாகி உள்ளது.
இருப்பினும் சம்மந்தப்பட்டவர்களும், மின் வாரியத்தினரும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.
தற்போது இதை ஒரு வாரத்திற்குள் அகற்ற கெடு விதித்து மின் மேற்பார்வை பொறியாளர் லதா கூறியதாவது:மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்கம்பங்கள், மின் வாரியத்திற்கு சொந்தமான உடைமைகள் மீது இழுத்து கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்கள், விளம்பர தட்டிகளால் மின் வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை செய்ய முடிவதில்லை.
கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதன் மூலம் மின் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரு வார காலத்துக்குள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.
தவறினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் , என்றார்.