/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெங்காய பயிர்கள் கருகல் தோட்டக்கலை துறையினர் ஆய்வு
/
வெங்காய பயிர்கள் கருகல் தோட்டக்கலை துறையினர் ஆய்வு
வெங்காய பயிர்கள் கருகல் தோட்டக்கலை துறையினர் ஆய்வு
வெங்காய பயிர்கள் கருகல் தோட்டக்கலை துறையினர் ஆய்வு
ADDED : ஆக 28, 2025 11:54 PM
காரியாபட்டி: காரியாபட்டி எஸ்.மறைக்குளம் பகுதியில் வெங்காய பயிரில் கருகல் நோய் பாதிப்பு குறித்து தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காரியாபட்டி எஸ்.மறைக்குளம், தேனூர், சொக்கனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வெங்காய பயிரில் கருகல் நோய் பாதிப்பு குறித்து, நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து காரியாபட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் கார்த்திக், உதவி அலுவலர் அகல்யா, மண்டல ஆராய்ச்சி நிலைய நோயியல் துறை பேராசிரியர் அகிலா கள ஆய்வு செய்தனர். ஆங்காங்கே நுனி கருகல் இருப்பது கண்டறியப்பட்டது.
அதிக வெப்பத்தினால் இலை வழி நீர் போக்கு, வெப்பக் காற்றினால் ஏற்படும். கோடை, பருவ வெங்காய வயல்களில் தொடர்ந்து நீர் பாசனம் வழங்கி ஈரப்பதம் அளவினை பராமரிக்க வேண்டியது அவசியம். வெங்காய நடவுக்கு முன் 10 கிலோ தொழு உரத்தில் 1 கிலோ வெசிகுலர் ஆர்பஸ்குலர் மைகோரைசா பூஞ்சையினை கலந்து வயல்களில் இடும்போது செடிகளில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் பயிர் சேதமானது கட்டுப்படுத்தப்படுகிறது. குறு வட்டார அனைத்து விவசாயிகளும் ஏக்கருக்கு ரூ. ஆயிரத்து 573 பிரீமியம் தொகை செலுத்தி காரீப் 2025 பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயனடைய அறிவுறுத்தினர்.