/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழை நீரில் மூழ்கிய வெங்காய பயிர்கள்
/
மழை நீரில் மூழ்கிய வெங்காய பயிர்கள்
ADDED : நவ 25, 2025 02:44 AM
காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் பெய்த கன மழைக்கு வெங்காய பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
காரியாபட்டி எஸ்.மறைக்குளம், தேனூர், பனைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் வெங்காயம் இரு போகம் பயிரிட்டு வருகின்றனர். இந்த ஆண்டும் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் வெங்காயம் பயிரிட்டனர். துவக்கத்தில் அவ்வப்போது மழை பெய்ததால், வெங்காய பயிர்கள் நன்கு வளர்ந்து காய் பிடித்து இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. நல்ல விளைச்சல் ஏற்பட்டு, நல்ல விலைக்கு விற்கலாம் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கன மழைக்கு மழை நீர் தேங்கி, வெங்காய பயிர்கள் நீரில் மூழ்கின. காய்கள் பாதிக்கப்பட்டு, பலன் கிடைப்பது சந்தேகம் என புலம்பி வருகின்றனர். செலவு செய்த பணம் கூட கிடைக்காமல் போகும் நிலை உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
தனக்குமார், விவசாயி: முக்கிய விவசாயமாக வெங்காயம் பயிரிட்டு வருகிறோம். ஒரு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. அவ்வப்போது மழை தேவைப்படும். தொடர்ந்து மழை பெய்தால் வெங்காய பயிர்கள் தாக்கு பிடிக்காது. தற்போது விளைச்சல் ஏற்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த சமயத்தில் கனமழை பெய்து பயிர்கள் நீரில் மூழ்கியதால் காய்கள் அழுகிவிடும். அனைத்து விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளோம். அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

