/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறந்து கிடக்கும் மின் மீட்டர் பெட்டிகள்
/
திறந்து கிடக்கும் மின் மீட்டர் பெட்டிகள்
ADDED : டிச 12, 2024 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலைகளில் உள்ள ஜங்ஷன்களில் உயர் கோபுர மின் விளக்குகள் எறிய விட சுவிட்ச்கள் பொருத்தப்பட்ட மின் மீட்டர் பெட்டிகள் உள்ளன. இந்தபெட்டிகள் எப்போதும் திறந்த நிலையில் காணப்படுகிறது.
சிறுவர்கள், கால்நடைகள் அப்பகுதியில் சுற்றித் திரிவதால் ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகிறது. குறிப்பாக காரியாபட்டி மந்திரி ஓடை பிரிவு ரோட்டில் உள்ள மின் மீட்டர் பெட்டி சேதமடைந்து, திறந்து கிடக்கிறது. ஆபத்தை உணராமல் மின் மீட்டர் பெட்டியை தொட வாய்ப்பு உள்ளது. விபத்திற்கு முன் உடைந்த பெட்டியை சீரமைந்து மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

