தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திறந்து கிடக்கும் மேன்ஹோல் விபத்து அபாயம்

திறந்து கிடக்கும் மேன்ஹோல் விபத்து அபாயம்

திறந்து கிடக்கும் மேன்ஹோல் விபத்து அபாயம்


ADDED : ஜூன் 08, 2025 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2025 05:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாத்துார் : சாத்துார் வெம்பக்கோட்டை ரோட்டில் திறந்து கிடக்கும் மேன் ஹோலால் நாளுக்கு நாள் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது.

சாத்துார் நகராட்சியில் வெம்பக்கோட்டை ரோட்டின் இருபுறமும் வணிக நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த ரோட்டில் இருபுறமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதியதாக வாறுகால் கட்டும் பணி நடந்தது. ரோட்டின் இரு புறமும் நடந்த இந்த பணியில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டால் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதற்காக மேன் ஹோல் அமைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் ஆங்காங்கே மேன் ஹோல் மூடி போடப்படாமல் திறந்த நிலையில் உள்ளன. வெம்பக்கோட்டை ரோட்டில் மேட்டமலை கூட்டுறவு வங்கி மூலம் செயல்படும் மருந்தகம் முன்பு இதுபோன்ற அமைக்கப்பட்டுள்ள ஒரு மேன்ஹோல் மூடி போடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது.

திறந்து கிடக்கும் இந்த பகுதி ரோடு மட்டத்திற்கு உள்ளதால் வாகன ஓட்டிகள் பலர் இந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் முன் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us