தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குடியிருப்புகளுக்கு மத்தியில் திறந்தநிலை கிணறு

 குடியிருப்புகளுக்கு மத்தியில் திறந்தநிலை கிணறு

 குடியிருப்புகளுக்கு மத்தியில் திறந்தநிலை கிணறு


ADDED : மே 10, 2026 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 02:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி: திருத்தங்கல் செல்லியாரம்மன் கோயில் தெருவில் குடியிருப்பு களுக்கு மத்தியில் திறந்த நிலையில் உள்ள கிணற்றினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கிணற்றை துார்வார டெண்டர் விடப்பட்டும் பணிகள் துவங்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

திருத்தங்கல் செல்லியாரம்மன் கோயில் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கிணறு உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிணறு இப் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது.

தற்போது பயன் பாட்டில் இல்லாத நிலையில் குப்பை கிடங்காக மாறிவிட்டது. இப்பகுதியின் கழிவுநீரும் கிணற்றில் கலப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகிறது. கடந்த காலங்களில் திறந்த நிலையில் உள்ள இந்த கிணற்றில் தவறி விழுந்து இருவர் இறந்துள்ளனர்.

தற்போதும் கிணறு திறந்த நிலையிலேயே இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் கிணற்றில் விழ வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இதனை கடந்து தான் மக்கள் குடியிருப்பு களுக்கு செல்ல வேண்டும்.

எனவே கிணற்றை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. இதற்காக ரூ. 3.50 லட்சம் நிதி ஒதுக்கப் பட்டும் இதுவரையும் பணிகள் துவங்க வில்லை.

எனவே திறந்த நிலையில் உள்ள இந்த கிணறு மேலும் உயிர்ப்பலி வாங்குவதற்கு முன்பாக துார்வாரி பாதுகாப்பான மூடி அமைத்து பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us