நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அமைச்சர் ரேஷன் கடைகளை திறந்து வைத்தும் சமுதாய கூடத்திற்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.
அருப்புக்கோட்டையில் பெர்கின்ஸ் புரத்தில் எம்.எல்.ஏ., நிதியின் கீழ் 13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடையையும், பாரதி நகரில் 15 லட்சம் செலவில் கட்டப்பட்ட ரேஷன் கடையையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
மேலும் அம்மன் கோயில் தெருவில் 38 லட்சம் நிதியில் புதியதாக கட்டப்பட உள்ள சமுதாயக் கூடத்திற்கு அடிக்கல் நாட்டை பணிகளை துவக்கி வைத்தார். நகராட்சி துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.