ADDED : ஜூலை 16, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி பகுதியில் விதிமீறி இயங்கும் பட்டாசு ஆலைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது.
இந்த குழுவினர் ஆய்வு செய்து விதிமீறி இருப்பது கண்டறியப்பட்டால் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில் இரு நாட்களாக சிவகாசி பகுதியில் ஆய்வு குழுவினருக்கு பயந்து பல்வேறு பட்டாசுகள் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் சிவகாசி அனுப்பன்குளம் அருகே லலிதா பட்டாசு ஆலை இயங்கிய நிலையில் மூடப்பட்டிருந்ததாக தினமலர் நாளிதழில் படம் வெளியானது.
ஆனால் அந்த ஆலை வழக்கம் போல இயங்கியதாக உரிமையாளர் தெரிவித்தார்.