தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வாறுகால் கட்டும் பணிக்கு எதிர்ப்பு

வாறுகால் கட்டும் பணிக்கு எதிர்ப்பு

வாறுகால் கட்டும் பணிக்கு எதிர்ப்பு


ADDED : டிச 11, 2024 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2024 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி : சிவகாசி அருகே சித்துராஜபுரம் வெம்பக்கோட்டை ரோட்டில் கழிவுநீர் வெளியேறுவதற்காக சில வாரங்களுக்கு முன்பு வாறுகால் கட்டும் பணி துவங்கியது. இந்த வாறுகால் கட்டப்பட்டால் இதன் வழியே வருகின்ற கழிவு நீர் டி.மானகசேரி ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கலாபுரம் மன்னர் திருமலை நகரில் உள்ள கண்மாயில் கலந்து விடும். இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது என கொங்கலாபுரம் பகுதி மக்கள் வாறுகால் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

நேற்று காலை வழக்கம் போல வாறுகால் கட்டும் பணி துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொங்கலாபுரம் பகுதி மக்கள் திரண்டு வாறுகால் கட்டும் இடத்திற்கு வந்தனர்.

டவுன் இன்ஸ்பெக்டர் புகழேந்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சப் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்க கூறினார். இதற்கிடையே வாறுகால் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கொங்கலாபுரம் மக்கள் சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரனிடம் மனு கொடுத்தனர். சப் கலெக்டர் அவர்களிடம், வாறுகால் கட்டும் பணி நிறுத்தப்பட மாட்டாது தொடர்ந்து நடைபெறும் என கூறினார். இதைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us