/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு விபத்தில் பாதித்த குழந்தைகளுக்கு ஆணை
/
பட்டாசு விபத்தில் பாதித்த குழந்தைகளுக்கு ஆணை
ADDED : ஜூலை 23, 2025 12:14 AM
விருதுநகர்; விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்துக்களில் பெற்றோரை இழந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகைக்கான ஆணைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
தொழிலாளர் நலத்துறை, தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சார்பில் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில், எம்.எல்.ஏ., சீனிவாசன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா முன்னிலையில், பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் பெற்றோரை இழந்த தொழிலாளர்களின் 38 குழந்தைகளுக்கு மாந்தோறும் ரூ.2000 வீதம் மொத்தம் ரூ.5.20 லட்சத்திற்கான உதவித்தொகை ஆணைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
இணை இயக்குநர்கள் ரவிச்சந்திரன், ராஜ்குமார், விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன் பங்கேற்றனர்.