ADDED : மார் 04, 2024 07:00 AM

திருச்சுழி : விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கட்டனுார் பச்சேரியை சேர்ந்த விவசாயி சத்தியமூர்த்தி 65, டூவீலரில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறினர். அவரது மனைவி யசோதை கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். கருவிழிகள், எலும்பு மதுரை அரசு மருத்துவமனையில் 2 பேருக்கும், தோல் மதுரை கென்னட் மருத்துவமனைக்கும் தானம் செய்யப்பட்டது. நேற்று மாலை 4:00 மணிக்கு அவர் சொந்த ஊர் பச்சேரியில் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது.
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு, திருச்சுழி டி.எஸ்.பி., ஜெகநாதன், தாசில்தார் பாண்டி சங்கர், நரிக்குடி இன்ஸ்பெக்டர் சிவபாலன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின் உடல் தகனம் செய்யப்பட்டது.
