/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லுார்து அன்னை சர்ச் திருவிழா தேர்பவனி
/
லுார்து அன்னை சர்ச் திருவிழா தேர்பவனி
ADDED : மே 26, 2025 01:58 AM

விருதுநகர்: விருதுநகர் ஓ.கோவில்பட்டியில் உள்ள லுார்து அன்னை சர்ச் திருவிழா தேர்பவனியுடன் நடந்தது.
விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டியில் உள்ள லுார்து அன்னை சர்ச் திருவிழா மே 16ல் திருச்சி பல்சமய உரையாடல் பணிக்குழு செயலாளர் பெனடிக் பர்னபாஸ், ஆர்.ஆர்.,நகர் பாதிரியார் பீட்டர்ராய் ஆகியோர் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் பின் தினமும் திருவிழா நவநாள் திருப்பலி, மறையுரையும், 6 நாட்கள் திருவிழா தொடர்ந்து நடந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் மதுரை ஆர்.சி., பள்ளிகளின் கண்காணிப்பாளர் இஞ்ஞாசி அற்புதராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி, மறையுரை நடந்தது. இதில் லுார்து அன்னையின் உருவம் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடந்தது.
மேலும் மதுரை மாவட்ட பேராயர் பால் இக்னேசியஸ் தலைமையில் நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடந்து திருவிழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை ஆர்.ஆர்.,நகர் பாதிரியார் பீட்டர்ராய் தலைமையில் மக்கள் செய்தனர்.