தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கிடப்பில் புறக்காவல் நிலையம் கட்டும் பணி

 கிடப்பில் புறக்காவல் நிலையம் கட்டும் பணி

 கிடப்பில் புறக்காவல் நிலையம் கட்டும் பணி


ADDED : ஜூலை 09, 2026 10:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 10:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி:திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியில் 4 ஆண்டுகளாக புறக் காவல் நிலையம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனி, சுக்கிரவார்பட்டி ரோடு, முத்துமாரி காலனியில் 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் அவ்வப்போது சிறுசிறு திருட்டு சம்பவங்கள் சமூக விரோத செயல்கள் நடந்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் இங்கு புற காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாண்டர்டு காலனியில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கியது. கட்டடம் பாதி கட்டிய நிலையில் இப்பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதனால் தற்போது அப்பகுதியில் சிறு சிறு குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருப்பதால் மக்கள் அச்சத்திலும் அதிருப்தியிலும் உள்ளனர். புறக் காவல் நிலைய கட்டடத்தை கட்டி போலீசார் நியமிக்கப்பட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us