/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குகன்பாறையில் தரைப்பாலம் சேதம் 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பாதிப்பு
/
குகன்பாறையில் தரைப்பாலம் சேதம் 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பாதிப்பு
குகன்பாறையில் தரைப்பாலம் சேதம் 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பாதிப்பு
குகன்பாறையில் தரைப்பாலம் சேதம் 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பாதிப்பு
ADDED : ஜூலை 08, 2025 01:13 AM

சிவகாசி:வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் இருந்து குகன்பாறை செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளதால் 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இதனை அகற்றி உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியிலிருந்து குகன் பாறை செல்லும் வழியில் வல்லம்பட்டி கண்மாய் செல்லும் ஓடையில் தரைப்பாலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் வழியே குகன் பாறை, ஏழாயிரம்பண்ணை, சிப்பிப்பாறை கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
இதேபோல் குகன் பாறை பகுதியில் இருந்து ஆலங்குளம், சங்கரன்கோவில், கழுகுமலை, ராஜபாளையம் உள்ளிட்ட நகரங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். தவிர இப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் வாகனங்களில் மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது.
இயல்பாகவே வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்ற நிலையில் மழைக்காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதி தனியாக துண்டிக்கப்பட்ட நிலை ஏற்படுகிறது. எனவே சேதம் அடைந்த தரைப்பாலத்தை அகற்றி உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை எதிர்பார்க்கின்றனர்.