தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தரைப்பாலம் சேதம்: தினம் ஒரு விபத்து

தரைப்பாலம் சேதம்: தினம் ஒரு விபத்து

தரைப்பாலம் சேதம்: தினம் ஒரு விபத்து


UPDATED : மே 15, 2026 05:54 PM

ADDED : மே 15, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 15, 2026 05:54 PM ADDED : மே 15, 2026 05:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:திருச்சுழி அருகே தரைப்பாலம் சேதமடைந்திருப்பதால் தினம் தினம் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பூலாங்கால். இந்த ஊரின் நுழைவுப் பகுதியில் ஒரு தரைப்பாலம் உள்ளது. வளைவான பகுதியில் இது அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதி சேதம் அடைந்து உடைந்து விட்டது. வளைவு பகுதியில் திரும்பும் போது சிறிய ,கனரக வாகனங்கள் வாறுகாலில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றன. இதனால், வாகனங்களை அப்புறப்படுத்துவதற்குள் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாலத்தை சரி செய்ய கோரிக்கை வைத்து அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், தொடர்ந்து விபத்து ஏற்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக பாலத்தை புதியதாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us