/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் செயல்படாத ஆக்சிஜன் உற்பத்தி மையம்
/
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் செயல்படாத ஆக்சிஜன் உற்பத்தி மையம்
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் செயல்படாத ஆக்சிஜன் உற்பத்தி மையம்
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் செயல்படாத ஆக்சிஜன் உற்பத்தி மையம்
ADDED : பிப் 03, 2025 04:55 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கோடிக்கணக்கான நிதி செலவில் கட்டப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது.
அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் அரசு மருத்துவமனை உள்ளது. ஆயிரக்கணக்கான உள்ளூர், அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற வந்து செல்வர்.
2021ல், மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு தேவையான கட்டடங்கள், வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மருத்துவமனையில் அக்.2021ல், பிரதமரின் பி.எம்.கேர். திட்டத்தின் கீழ், 1 கோடி 80 லட்சம் நிதியில், ஆக்சிஜன் உற்பத்தி மையம் துவங்கப்பட்டது.
இதில் பெறப்படும் ஆக்சிஜன் 150 - 200 நோயாளிகள் சுவாசிக்கும் வகையில் உள்ளது. ஆப்ரேஷன் தியேட்டர்கள், பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு உள்ளிட்ட பிரிவுகளில் 24 மணி நேரமும் ஆக்சிஜன் இருக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மையம் திறப்பு விழா கண்டு 6 மாதங்கள் மட்டும் செயல்பட்டு வந்தது. 3 ஆண்டுகளாக செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
டாக்டர் இளங்கோ, மருத்துவ அதிகாரி: ஆக்சிஜன் பிளான்ட் அமைத்துக் கொடுத்த நிறுவனம் சர்வீஸ் செய்ய வரவில்லை. மருத்துவமனையில் ஆக்சிஜன் பயன்பாட்டிற்காக லிக்விட் மெடிக்கல் ஆக்சிஜன் பிளான்ட் வைத்து செயல்படுத்தி வருகிறோம்.
பழைய ஆக்சிஜன் பிளான்ட் பராமரிப்பு பணி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.