ADDED : ஜன 06, 2025 12:18 AM
விருதுநகர்; காரியாபட்டி முடுக்கன்குளத்தில் நெல் வயல் சூழல் ஆய்வு குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் கீதா பயிற்சியை துவங்கி வைத்து அரசு திட்டப்பணிகள் குறித்தும், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வேளாண் பொருட்களை மானிய விலையில் பெற்றிடுவது குறித்தும் விளக்கினார்.
உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண் அலுவலர் அரிபுத்திரன் நெல் வயல் சூழல் ஆய்வு, நன்மை செய்யும் தீமை செய்யும் பூச்சிகள் இனங்கள் கண்டறிதல், பூச்சிகளின் செயல்பாடுகள், பயிரைத்தாக்கும் நோய்கள், அறிகுறிகள், இயற்கை வழிமுறை பயிர் பாதுகாப்பு, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் பயன்பாடு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்தார்.
விவசாயிகளுக்கு நேரடி நெல் வயல் ஆய்வு மூலம் பூச்சி இனங்கள் நோய் தாக்கங்கள் அறிகுறிகள் விளக்க படங்களுடன் பயிற்சி வழங்கப்பட்டது.