ADDED : ஜூன் 03, 2026 04:50 AM
சேத்துார்: ராஜபாளையம் அடுத்த சேத்துார், தேவதானம், கோவிலுார் பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என்ற தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது
சேத்துார், தேவதானம், கோவிலுார் பகுதிகளில் இரண்டாம் போக சாகுபடியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நெல் பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் தொடங்கி ஒரு வாரத்துக்கு மேலாகியும் அரசு சார்பில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை நெல்லை களத்தில் குவித்து வைத்திருந்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்து வெளியிட்டிருந்தோம்.
செய்தி எதிரொலியாக சேத்தூர் மேட்டுப்பட்டி பசும்பொன் நகர் பொட்டக்களத்தில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு சன்ன ரக நெல் கிலோ ரூ.25.45, மோட்டா ரகம் ரூ.25-க்கும் விவசாயிகளிடமிருந்து தினசரி ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
