ADDED : பிப் 09, 2024 03:54 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ராஜபாளையம் ரோடு மடவார் வளாகம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு பொதுரக நெல் ஒரு கிலோ ரூ.22.65 க்கும், சன்ன ரக ஆ ரூ. 23.10 க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
நெல் கொள் முதல் நிலையம் செயல்பாட்டுக்கு வந்த 2 நாட்களில், 38 ஆயிரத்து 400 கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லுக்கான பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. சுற்று வட்டார விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள், விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
