/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குறைந்தது பாமாயில், வத்தல் உயர்ந்தது உளுந்து, பட்டாணி : மார்க்கெட் நிலவரம்
/
குறைந்தது பாமாயில், வத்தல் உயர்ந்தது உளுந்து, பட்டாணி : மார்க்கெட் நிலவரம்
குறைந்தது பாமாயில், வத்தல் உயர்ந்தது உளுந்து, பட்டாணி : மார்க்கெட் நிலவரம்
குறைந்தது பாமாயில், வத்தல் உயர்ந்தது உளுந்து, பட்டாணி : மார்க்கெட் நிலவரம்
ADDED : ஏப் 20, 2025 03:11 AM
விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில், வத்தல் விலை குறைந்து, உளுந்து, பட்டாணி விலை உயர்ந்தன.
பாமாயில் 15கி., (கிலோ) ரூ.65 குறைந்து ரூ.2,100, முண்டு வத்தல் 100கி., ரூ.2,000 குறைந்து ரூ.10,000, வத்தல் நாடு 100கி., ரூ.1,000 குறைந்து ரூ.9,000, குண்டூர் வத்தல் 100கி., ரூ.1,000 குறைந்து ரூ.11,000க்கு விற்பனையானது.
துவரம் பருப்பு நாடு 100கி., ரூ.200 குறைந்து ரூ.10,300, நயம் லயன் 100கி., ரூ.11,100, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100கி., ரூ.300 உயர்ந்து ரூ.10,800, நாடு பர்மா 100கி., ரூ.500 உயர்ந்து ரூ.10,000, தொலி பருப்பு 100கி., ரூ.100 குறைந்து ரூ.9300க்கு விற்பனையானது.
பட்டாணி பருப்பு 100கி., ரூ.200 உயர்ந்து ரூ.4700, வெள்ளை பட்டாணி 100கி., ரூ.400 உயர்ந்து ரூ.4400, உளுந்து நாடு 100கி., ரூ.100 உயர்ந்து ரூ.7200க்கு விற்பனையானது.
க.எண்ணெய் 15 கி., ரூ.2500, ந.எண்ணெய் 15 கி., ரூ. 5775, சர்க்கரை 50கி., ரூ.2210, மைதா 90கி., ரூ.4590, ரவை 30கி., ரூ.1520, கொண்டைக்கடலை 100 கி., ரூ. 6400க்கு விற்பனையானது.
மல்லி லயன் 40கி., ரூ.3,450 முதல் ரூ.3,600 வரை, நாடு 40கி., ரூ.3,500 முதல் ரூ.4,300 வரை, பாசிப்பருப்பு 100கி., ரூ.9,550 முதல் ரூ.9,900 வரை, பாசிப்பயறு நாடு 100கி., ரூ.7,800 முதல் ரூ.8,000 வரை, லயன் மீடியம் 100கி., ரூ.6,800 முதல் ரூ.7,000 வரை, கடலை புண்ணாக்கு 100கி., ரூ.4,200, எள் புண்ணாக்கு 50கி., ரூ.1,800க்கு விற்பனையானது.

