ADDED : டிச 17, 2025 06:06 AM
அ நிறம் | அளவு
நரிக்குடி: நரிக்குடி ஆனைகுளத்தில் இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையில் கண்மாய் கரையில் பனை விதைகள் நடும் விழா நடந்தது.
காவை தென்னிந்திய கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். வீரசோழன் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி துவக்கி வைத்தார். 800 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் வாசு, ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ், வி.ஏ.ஓ., கோட்டை முத்து, ஊராட்சி செயலாளர் ஜெயமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருச்சுழி போலீசார் பூபதி செய்தார்.
