/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழி ரோட்டில் விழுந்த பனைமரம்
/
திருச்சுழி ரோட்டில் விழுந்த பனைமரம்
ADDED : ஏப் 08, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழி மெயின் ரோட்டில் பனைமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருச்சுழியில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு பலத்த காற்று வீசியது. இதில், அருப்புக்கோட்டை திருத்சுழி ரோட்டில் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள பனைமரம் பலத்த காற்றுக்கு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.
தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் வீரர்கள் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.