/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊராட்சி மின் மோட்டார் வயர் திருட்டு குடிநீரின்றி 20 நாட்களாக மக்கள் அவதி

ADDED : ஜூலை 04, 2025 02:46 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆத்திப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான மின்மோட்டார் வயர் திருடுபோனதால் 20 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆத்திப்பட்டி ஊராட்சியை சேர்ந்தது பெத்தம்மாள் நகர், லட்சுமி நகர். இந்தப் பகுதிகளுக்கு ஊராட்சி மூலம் மேல்நிலைத் தொட்டி கட்டி, மின் மோட்டார் மூலம் ஏற்றி, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 20 நாட்களுக்கு முன்பு மின்மோட்டார் வயரை யாரோ திருடி சென்று விட்டதால் குடிநீர் வினியோகம் தடைபட்டது. மேலும் புதியதாக வயர் மாற்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு ஊராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டியதால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
ஆத்திபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி : மின் மோட்டார் வயரை யாரோ திருடி சென்று விட்டதால் குடிநீர் தடைபட்டு உள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. உடனடியாக மின்மோட்டாரை சரி செய்யா விடில் என் சொந்த செலவில் மின் மோட்டார் வயர் வாங்கி இயக்குவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க உள்ளேன்.