/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில்களில் பங்குனி உத்திர வழிபாடு
/
கோயில்களில் பங்குனி உத்திர வழிபாடு
ADDED : ஏப் 12, 2025 06:24 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சைவ கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடந்தது.
சிவன், முருகன், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த தினமான பங்குனி உத்திர தினத்தை முன்னிட்டு காலை முதலே கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயில், வெயிலுகந்தம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் பங்குனி உத்திர வழிபாடு சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று காலை சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதேபோல் ஸ்ரீவில்லிபுத்துாரில் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், பழனியாண்டவர் கோயில், நத்தம் பட்டி வழிவிடு முருகன் கோயில் உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திர வழிபாடு நடந்தது.
இதே போல் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் கோயில்களிலும் வழிபாடு நடந்தது.

