/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பரமக்குடி பாலியல் வழக்கு அறையை மூடி விசாரணை
/
பரமக்குடி பாலியல் வழக்கு அறையை மூடி விசாரணை
ADDED : நவ 28, 2024 02:59 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மூடிய அறையில் நடந்தது.
இவ் வழக்கில் பரமக்குடியைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் சிகாமணி, அன்னலட்சுமி, கயல்விழி, ராஜ முகமது, பிரபாகரன் ஆகியோர் மீது ராமநாதபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கை 5 மாதத்திற்குள் விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் தரப்பில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று முதல் சாட்சி விசாரணை துவங்கியது. அறையை மூடி பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 5 பேரிடம் விசாரணை நடந்தது. பின்னர் வழக்கின் விசாரணையை டிச.4க்கு நீதிபதி சுதாகர் ஒத்தி வைத்தார்.